கோலாலம்பூர்:

ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பொருட்களின் விலையை வர்த்தகர்கள் குறைக்க வேண்டும் என்று மலேசியா சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் மகாதீர் முகமது பிரதமர் பதவி ஏற்றவுடன் அங்கு விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கு பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஜிஎஸ்டி.யின் கீழ் இருந்த பொருட்கள் அனைத்துக்குமான விலையை வர்த்தகர்கள் குறைக்க வேண்டும் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுங்கத் துறை இயக்குனர் ஜெனரல் சுப்ரோமணியன் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி வதிப்பின் கீழ் உள்ள பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வர்த்தகர்கள் செயல்பட வேண்டும். இதன் பயன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பொருட்களின் விலையை ஜூன் 1ம் தேதி முதல் குறைக்க வேண்டும்’’ என்றார்.