போக்குவரத்து  விழிப்புணர்வுக்கு `கானா` பாடல்! சென்னை போலீசாரின் வினோத பிரசாரம் (வீடியோ)

சென்னை,

சாலை விதிக்களை பொதுமக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் விதமாக கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது பிரபலமாகி வரும் கானா பாடல் மூலம் சாலை விதிகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் பிடித்த கானா பாடல் மூலம்வ விழிப்புணர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சென்னை மாநகரபோக்குவரத்துக்கா வல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அந்த பாடலை பிரபல `கானா` பாடகர் ‘கானா பாலா’   பாடியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் கூறியதாவது,

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, கானா பாடல் வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதுகுறித்து பல அதிகாரிகளுடன் விவாதித்தபோது,  கானா பாடல் என்ற யுக்தி சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டது என்றார்.

தற்போது வெளியான இந்த பாடல், இளைஞர்களை கவனத்தை ஈர்த்துள்ளது போல, இந்த விழிப்புணர்வு செய்திகளையும் அவர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்தார்.

இந்த பாடல் பாடிய கானா பாலா இதுகுறித்து கூறும்போது, பல பெற்றோர்கள் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்றால், தங்களது குழந்தைகளுக்கு புது மாடல் பைக் அல்லது காரை வாங்கித்தரு வது ஒரு கலாசாரமாக மாறியுள்ளது. உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வண்டி ஓட்டுவதை பெற்றோர் கண்டிக்கவேண்டும். பல சாலை விபத்து சம்பவங்கள் நேர்வதை இதன்மூலம் தடுக்கமுடியும்,” என்றார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பட்டம் விடும் கயிற்றால் ஏற்படும் மரணங்கள் பற்றிய பாடல் ஒன்றை சென்னை காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பாடியுள்ளார்.

சாலை விதிகள் பற்றிய கானா பாடலை யூ டிப், பேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பகிர்ந்துள்ளது.

video credit:

https://www.youtube.com/watch?v=9YebXddmnco