சென்னை

மிழ்நாடு அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியொ அறிவித்துள்ள போராட்டத்தை அடுத்து சென்னை கோட்டை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறது.   அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்காததால் இன்று சென்னை கோட்டையில் அமைந்துள்ள தலைமை செயலகத்தை முற்றுகை இடப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது.   அதை ஒட்டி சங்கத்தின் முக்கிய புள்ளிகள் பலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியூரில் இருந்து போராட்டத்துக்காக சென்னை வரும் தொழிற்சங்க நிர்வாகிகளில் பலர் வழியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மேலும் தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தலைமைச் செயலகம் உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   போர் நினைவுச் சின்னத்தில் இருந்து தலைமை செயலகம் வரையிலான சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.   தலமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.