செங்கல்பட்டு : சுங்கச்சாவடி மோதலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆம்னி பேருந்து ஓட்டுனருடன் ஏற்பட்ட மோதலல் போக்குவரத்து 3 மனி நேரம் பாதிக்கப்பட்டது.

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது.   திருச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுனருடன் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்த போது அங்கிருந்த ஊழியருக்கும் ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதை ஒட்டி ஓட்டுனரை அங்கிருந்த ஊழியர்கள் தாக்கி உள்ளனர்.   பயணிகள் ஊழியர்களை தாக்கியதால் அந்த இடத்தில் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது.    சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பயணிகளும் ஓட்டுனரும் சாலை மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.   அந்த இடத்துக்கு காவல்துறையினர் விரந்து வந்துல்ள்னர்.  இரு தரப்பினரிடையே காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை ஒட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது.   இந்த போராட்டத்தால் சுமார் 5 கிமீ தூரம் வரை வாகனங்கள் வழியில் நின்றபடி இருந்தன.