முதல்வரை பதவி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

மதுரை,

மிழக முதல்வர் மற்றும்  இரண்டு அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.

டிஃராபிக் ராமசாமி இன்று தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடை பெற்றது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 420-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி