தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு!: டிராப்பிக் ராமசாமி அறிவிப்பு

 

டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி அறிவித்துள்ளார்.

ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராப்பிக் ராமசாமி தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ‘ ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக விரைவில் வழக்கு தொடர்வேன். ஆனாலும் அனைவரையும் எதிர்த்து போட்டியிட்ட அவரின் மன உறுதியை வாழ்த்துகிறேன் . ஆனால் இந்த வெற்றி சரியான முறையில் கிடைத்தது அல்ல” என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பெரும் பணம் புழங்கியதாக குற்றம் சாட்டிய அரசியல் கட்சிகள் எதுவும், தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.