போக்குவரத்து உத்தரவுகளை காவலர்கள் முதலில் பின்பற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை

போக்குவர்த்து சம்பந்தப்பட்ட அனைத்து விதிகளையும் முதலில் காவல்துரையினர் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது

போக்குவரத்துத் துறை அனைத்து வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்பவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும்,  வாகனங்களில் செல்வோர் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற பாதுகாப்பு உத்தரவுகளை விதித்தது.   இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,”இருசக்கர வாகனத்தில் செல்லும் போது இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.    காரில் சீட் பெல்ட் அணிவது மிகவும் அதிசயம்.   இரு சக்கர வாகனங்களின் பின்பு பல வண்ண பல்புகள் பொருத்தக் கூடாது.

ஆனால் இவைகளை எல்லாம் காவலர்கள் முதலில் பின்பற்ற வேண்டும்.   இந்த விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்யவேண்டும்.   அத்துடன் காவலர்கள் ஹெல்மெட் அணிவதையும் சீட் பெல்ட் அணிவதையும் முதலில் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே கேரளாவில் படு வேகமாக சென்ற முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போது பதவி வதிக்கும் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்கபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் உள்ள விதிமுறைகளை அவ்வாறு முறையாக பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.