தொடரும் சோகம்: திருவாரூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை!

--

திருவாரூர்,

திருவாரூர் அருகே தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை மரணம் அதிகரித்து வருகிறது. பருவ மழை பொய்த்துவிட்டதாலும், அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் நொடிந்துபோய் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துள்ளார்.

இரண்டரை ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகள்  தண்ணீரின்றி  காய்ந்ததால் விவசாயி பன்னீர்செல்வம் (48) தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தமிழக அரசு  சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தமிழகத்தில் விவசாயிகள் யாரும் வறட்சி காரணமாக சாகவில்லை என்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.