கோவையில் பயங்கரம்….2வது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி பலி

கோவை:

கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. அப்போது 2-வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரி குதிக்க தயாராக இருந்துள்ளார். உடன் பயிற்சியாளரும் இருந்தார். உரிய பாதுகாப்பு கயிறு கட்டாமல் யோகேஸ்வரி குதித்தார்.

மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் கீழே தயாராக இருந்தனர். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் சன்ஷேடில் அடிபட்டு விழுந்தார். இதில் படுகாயமடைந்த லோகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி குதிப்பதற்கு முன்பு அருகில் நின்ற பயிற்சியாளர் அவரை கீழே தள்ளிவிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி விழும் வீடியோ:

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FN_LHOlHppow&h=AT0Csg-EY62zCBRxrBOD-h20z0SdSFMlcrun4DVnv5lSbqzS_T6loiFa_oOFS2QA6M1sPvyDYo2h357Lrd0R6BtwxPbPRiIgYjYn5BXjCSsTZ726rVhJ-HG-8HP0oJqmP8jErWq48FjocX8NJCQN