திண்டுக்கல் அருகே சோகம்: ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், அந்த வழியாக ரயில் முன்பு திடீரென பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார், இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள், திருச்சி உறையூரைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் விசாரித்து அறிந்தனர்.

அவர்கள் தற்கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.