பிரான்ஸ் சோகம்: உலகக்கோப்பை கால்பந்து வெற்றி உற்சாகத்தால் இருவர் பலி

தங்கள் நாட்டு அணி உலகக்கோப்பை கால்பந்து அணியில் கோப்பையை பெற்றுள்ளதால் அதீத உற்சாகத்தில் அத்துமீறிய பிரான்ஸ் ரசிகர்களால் இரு உயிர்கள் பலியாகி உள்ளன.

கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது.  இதன்பிறகு  20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

 

 

இதையடுத்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி பிரானஸ் தலைநகர் பாரிஸில் சுமார் 4 ஆயிரம்  போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாரிஸ் ‘சாம்பஸ்-எலிஸஸ் அவென்யூ  – வில் சுமார் 10 ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ரசிகர்கள் சிலர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்களது உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.   இந்த கண்ணீர் புகையால்   ரசிகர்கள் மூச்சு எடுக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனால் போலீசார் தண்ணீர் வாகனத்தின் உதவியுடன் தண்ணீரை பாய்சியடித்து, ரசிகர்களை காப்பாற்றினர்.

இதற்கிடையே கால்பந்து ரசிகர்கள் மற்றும்  பாதுகாப்பு ஊழியர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

அன்னீனி ஆல்பின் நகரில் 50 வயதான   ரசிகர்  ஒருவர் உற்சாகத்தில்,  கால்வாயில் குதித்த போது  அவரது கழுத்து முறிந்து மரணமடைந்தார். செயின்ட்-பெலிக்ஸ் நகரில்,  30 வது வயது ரசிகர் ஒருவர் அதீத மது போதையில் மரத்தின் மீது காரை மோதியதில் பலியானார்.

பல்வேறு இடங்களில் போதையில் ரசிகர்கள்   கடைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் பல பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.