இலவச சேவை நீட்டிப்பை நிறுத்த ஜியோவுக்கு டிராய் உத்தரவு

டெல்லி:

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியுடன் ஜியோ இலவச சேவை முடிவுக்கு வர இருந்தது. ஆனால் இதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்தது.

அதாவது ஏப்ரல் 15ம் தேதி வரை ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை வாடிக்கையாளர்களுக்கு சேவையை ஜியோ நிறுவனம் இலவசமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ், நீட்டிக்கப்பட்ட 15 நாள் இலவச சேவையை உடனடியாக நிறுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ட்ராய் உத்தரவிட்டுள்ளது.