விரும்பும் சானல்களை தேர்வு செய்ய புதிய இணைய விண்ணப்பம் அறிமுகம் : கட்டணமும் தெரிந்து கொள்ளலாம்

புதுடெல்லி:

விரும்பிய சானலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் புதிய இணைய விண்ணப்பத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகப்படுத்தியுள்ளது.

விரும்பிய சானலை தேர்வு செய்யும் போதே, அந்த சானலுக்கான கட்டணமும் தரப்பட்டிருக்கும்.

புதிதாக சானல்களுக்கு மாறுவதற்கும், விரும்பி சானலை தேர்வு செய்வதற்கும் ஜனவரி 31-ம் தேதி கடைசி நாள்.

இணையத்துக்குள் சென்றவுடனேயே உங்கள் பெயர் உட்பட சில விவரங்கள் கேட்கப்படும்.
கீழே மொத்த சில்லறை விலை தரப்பட்டிருக்கும். எவ்வளவு ஜிஎஸ்டி பிடித்தம் என்ற விவரமும் இடம்பெறும்.

இலவச சானல்கள் தானாகவே கிடைக்கும்.