டில்லி:

விமானத்தில் பறக்கும்போது பயணிகள் மொபைல் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்யும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. ஆனால், இந்த சேவைகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. 2017ம் ஆண்டு ஆகஸ்டில் ‘டிராய்’ அமைப்பிடம் இது குறித்து கருத்து கேட்டிருந்தது.

‘‘விமானத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்தும்போது சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய வான் எல்லையில் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும்போது பயணிகள் இன்டர்நெட் பயன்படுத்தவும், மொபைல் போனில் அனுமதி அளிக்கலாம்’’ என டிராய் தற்போது பரிந்துரை செய்துள்ளது.