புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

புதுடெல்லி:

புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ராய் எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.


ட்ராய் தலைவர் ஆர்எஸ்.சர்மா கூறும்போது, வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யும் வாய்ப்பு மற்றும் வாடிக்கையாளர் நலன் சமரசம் செய்து கொள்ளக்கூடியது அல்ல.

தங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளன.

பெரும்பாலான புகார் சாப்ட்வேர் மற்றும் சாதனம் சார்ந்தே உள்ளன. புதிய கொள்கையின் முக்கிய அம்சம் வாடிக்கையாளர் தாங்கள் விரும்பும் சேனனை தேர்வு செய்வதுதான்.

கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் நிறுவனத்தினர் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை என்றார்.