ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியீடு

--

டிகை ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின்  டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துவரும் படம்  “காற்றின் மொழி”. இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும்  அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த  ஆகஸ்டு 15ந்தேதி  காற்றின் மொழி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜோதிகா 10 கட்டளைகளுடன் நிற்பது போன்று வெளியாகி ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து காற்றின்மொழி படத்தின் டீசர் கடந்த 16-8-18 அன்று வெளியாகி அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு டிரெய்லர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்  “தும்ஹாரி சுலு”. இந்த படத்தின் கதை தமிழில் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.  இந்த படத்தில் வித்யாபாலனின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில்  ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது.

படத்தை, ஏற்கனவே மொழி படத்தை இயக்கிய ராதாமோகனே இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக  வித்தார்த் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  இவர்களை தவிர  லட்சுமி மஞ்சு, குமாரவேல், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, மோகன் ராமன், உமா பத்மநாபன், சிந்துசுஷேரன், சீமா டேன்ஜா, மாஸ்டர் தேஜாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை ஏ.எச். காஷிப் அமைத்துள்ளார். பாடல்கள் மதன்கார்கி, கதை சுரேஷ் திரிவேணி, இயக்கம் ராதாமோகன். தயாரிப்பு தனஞ்செயன். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.