பராமரிப்பு : விழுப்புரம் மார்க்க ரெயில் சேவைகள் 4 நாட்கள் மாற்றம்

விழுப்புரம்

தெற்கு ரெயில்வேயின் விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரெயில் சேவைகள் 4 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயின் விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணி தொடங்க உள்ளது.   அதை ஒட்டி தெற்கு ரெயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில் வரும் 31ஆம் தேதி வரை ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் – புதுவை – எழும்பூர் இடையே செல்லும் ரெயில் வரும் 26 மற்றும் 27 தேதிகளில் திண்டிவனம் வரை மட்டுமே சென்று வரும்.  புதுவையில் இருந்து திருப்பதி வரை சென்று திரும்பும் ரெயிலும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வரை மட்டுமே இதே தேதிகளில் சென்று திரும்ப உள்ளது.

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் மதியம் 1.40 மணிக்கு பதிலாக 3.40 க்கு இயக்கப்படும்.  அதே போல் எழும்பூர் – காரைக்குடி இடையே செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் மாலை 3.45க்கு பதில் 4.15 க்கு கிளம்பும்.   மன்னார்குடி – திருப்பதி இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் இன்று 1.30 மணி நேரம் தாமதாமாக இயக்கப்படும்

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே இரு வழிகளிலும் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.