நாகர்கோயில் – திருவனந்தபுரம் ரெயில் நிறுத்தம் : கடும் மழை எதிரொலி

ன்யாகுமரி

னமழை காரணமாக நாகர்கோயில் – திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.

கன்யாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.  மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது.  பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மின் கம்பங்களும், மரங்களும் அடியோடு சாய்ந்துள்ளன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் – திருவனந்தபுரம் இடையே உள்ள ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  கடல் மிகவும் சீற்றத்துடன் காணப் படுகிறது.  கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனால் கரை திரும்ப முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.