இன்று பராமரிப்பு பணி : ரத்தாகும் சில மின்சார ரெயில்கள்

சென்னை

ண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தென்னக ரெயில்வே தெரித்துளது.

தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள அறிக்கையில், “இன்று அதாவது ஜனவரி 13 ஆம் தேதி ரெயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதை ஒட்டி ஒரு சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில் சேவைகளில் இன்று மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செலும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக சென்னை செண்டிரலில் இருந்து பகல் 1.25க்கு அரக்கோணம் வரை ரெயில் விடப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரெயில் பிற்பகல் 3.55 மணிக்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை செல்ல உள்ளது.

இன்று இரவு 7.05க்கு சென்னை செண்டிரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயிலும் இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.