இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகரித்து வந்ததால், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்று சேரும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் ரயில்கள் முழுமையாக இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.