திருநங்கைகளுக்கு புதிய உரிமை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

ரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் திருநங்கைக:ளாக இருக்கு் குழந்தைகள், தந்தையின் பணிப் (பண) பயனை அடைவதில் சிக்கல் இருந்தது. இந்த திருநங்கை குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்காமல் இருந்ததே இதற்குக் காரணம். தற்போது இது குறித்து தமழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்.  குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு. இதை அவர்கள் தமது வாழ்நாள் வரை அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (GO Ms No.180 Finance (Pension) Dept, dt 20.06.2017)

 

தங்களுக்கு  இதுவரை மறுக்கப்பட்டுவந்த புதிய உரிமை கிடைத்துள்ளதாக திருநங்கைகள்  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.