பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..

கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப்  பெண்ணாக வாழ வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது.

’’ குடும்பத்தைப் பிரிந்து பெண்கள் ’கூட்டத்தில்’ வாழப்போகிறேன்’’ என்று தனது ஆசையைத் தெரிவித்தான்.

ஆனால் குடும்பத்தார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் சில தினங்களுக்கு முன்,வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்து ஊரில் திருநங்கை ஒருவருடன் இருந்துள்ளான்.

அவனது குடும்பத்தார் போலீசில் புகார் செய்ததால் அந்த சிறுவனை மீட்டு, அங்குள்ள சிறுவர் நலக்கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவர் நலக்கமிட்டி உறுப்பினர்கள் 4 மணி நேரம் அவனிடம் விசாரணை நடத்தினர்.

பெண்ணாக வாழ வேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான்.

இதையடுத்து கள்ளிக்கோட்டையை சேர்ந்த ரியா இஷா என்ற திருநங்கையிடம் , அந்த சிறுவனை ஒப்படைத்த சிறுவர் நலக்கமிட்டி, 30 நாட்கள் அவனை பராமரிக்குமாறு பணித்துள்ளனர்.

அந்த திருநங்கை இஷா, ‘’ 30 நாட்கள் சிறுவனை எனது பொறுப்பில் வைத்துப் பராமரிக்கிறேன்’’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து, அவனை அழைத்துச் சென்றுள்ளார்.

-பா.பாரதி.

You may have missed