நாட்டில் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோயிதா மோதோக்தி பதவி ஏற்றுள்ளார்.

ஜோயிதா மோதோக்தி திருநங்கை என்று தெரிய வந்ததும், கடந்த 2010ம் ஆண்டு  அவரை  வீட்டில் சேர்க்க மறுத்து அவரது பெற்றோர் வெயேற்றி விட்டனர். இதைத்தொடர்ந்து அவர் பஸ் நிலையங்களில் படுத்து தூங்கியும், பிச்சையெடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜோயிதா, வாழ்வில் முன்னேற வேண்டும் என ஒரே குறிக்கோளுடன்  கடுமையான சோதனைகளை எதிர்கொண்டார்.

தனது பாலினம் காரணமாக சமூதாயத்தில் சாதாரண மக்களிடம் இருந்து  நிறைய வேறுபாடுகளை சந்தித்தார்.

கடினமாக படித்து தனது வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றினார். சட்டம் பயின்று அதற்கான பயிற்சியும் பெற்று வந்தார். அவர் தனக்காகவும், தன்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்காகவும் தனித்து நிற்று போராட முடிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து அதற்காக ஒரு சமூக சேவை அமைப்பை தொடங்கி நடத்தினார். மேலும், டினாஜ்பூர் நோட்டன் ஆலோ சொசைட்டி நிறுவனர் செயலாளராக இருந்தார்.

இதன்மூலம் நாட்டில் திருநங்கைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வந்தார். இந்நிலை யில் ஜோயிதா மோதோக்திக்கு லோக் அதாலத் நீதிபதி பதவி கிடைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து இஸ்லம்பூர், உத்திர டினாஜ்பூரின் லோக் அதாலத் நீதிபதி பதவிக்கா உத்தரவு ஜூலை 8, 2017 அன்று வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் நீதிபதியாக பதவி ஏற்றார்.

அன்று பேருந்து நிறுத்தத்தில் ஆதரவின்றி தனித்து விடப்பட்ட திருநங்கை,  ஜோயிதா மோதோக்தி லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.