Random image

ஒரிசா திருநங்கை அதிகாரி திருமணத்துக்கு விண்ணப்பம்

புவனேஸ்வர்

ச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி ஒரிசா மாநில திருநங்கை அதிகாரி தனது திருமணத்துக்கு  விண்ணப்பம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல எனவும் சட்ட எண் 377ஐ ரத்து செய்யலாம் அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.   இந்த தீர்ப்புக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.   ஓரின சேர்க்கைப் பிரியர்கள் மட்டுமின்றி பல திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

ஒரிசா மாநிலத்தில் நிதித்துறை அதிகாரியாக பணி புரிபவர் ஐஸ்வர்யா ருதுபர்ணா பிரதான்.   34 வயதான இவர் மூன்றாம் பாலினமான திருநங்கை ஆவார்.   இவர் தன்னை ஆண் என்பதில் இருந்து மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்குமாறு ஏற்கனவே அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.   ஒரிசா மாநிலத்தில் தென்கானல் என்னும் இடத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்த இவர் தனது கல்வீக்கேற்ப பணியை தொடராமல் 2010 ஆம் வருடம் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்,

தற்போது நிதித்துறை அதிகாரியாக பணி புரியும் இவர் தனது சிறு வயதில் தமது பாலின குறைபாடு காரணமாக பலராலும் கிண்டல் செய்யப்பட்டுள்ளார்.   அது மட்டுமின்றி கல்லூரி காலத்தில் பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கபட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த வாழ்வை என்றும் மறைக்காத ஐஸ்வர்யா, தனது ஆண் நண்பருடன் கடந்த இரு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.   தற்போது அவரையே திருமணம் செய்துக் கொள்ள விண்ணப்பம் அலித்துள்ளார்.   அடுத்த வருடம் தனது நண்பரை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறும் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பு தன்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.