போலீஸ் அதிகாரியை கொலை செய்ய முயன்ற திருநங்கைகள்! அதிர்ச்சி வீடியோ

சென்னை,

பாலியல் தொழிலுக்காக நுங்கம்பாக்கம் அருகே உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையோரம் நின்றிருந்த திருநங்கையை, அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார் போலீஸ் அதிகாரி.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் சக திருநங்கைகளுடன் இணைந்து அந்த போலீஸ் அதிகாரியிடம் தரக்குறைவாக பேசி, தாக்கி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த களேபரம் காரணமாக  போலீஸ்அதிகாரி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதை கவனித்த அந்த பகுதி பொதுமக்கள் திருநங்கைகளிடம் இருந்து அந்த போலீஸ் அதிகாரியை மீட்டு சென்றனர்.

இவ்வளவு நடைபெற்றும், பிரச்சினையில் ஈடுபட்ட  திருநங்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

திருநங்கைகளின் போக்கு அத்துமீறி செல்கிறது என்றும்… இதற்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து… திருநங்கைகளின் அத்துமீறும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.