டில்லி:
டிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் திடீரென தனது  மேற்சட்டையை கழற்றியதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி மயூர் விகார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள்  நின்று கொண்டிருந்தனர். அந்த   வரிசையில் நின்று கொண்டு இருந்த ஒரு திருநங்கை திடீரென, தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த போலீசார். உடனடியாக பெண் காவலர்களை அழைத்தனர். வந்த பெண் காவலர்கள் அந்த திருநங்கையை அருகில் இருக்கும் காசிபூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து பேசிய அந்த திருநங்கை ”என்னை ஆண் வரிசையிலும் நிற்க அனுமதிக்க வில்லை. பெண் வரிசையில் நிற்வும் அனுமதிக்கவில்லை. இரு தரப்பினரும் என்னை விரட்டி அடித்தார்கள். இதை காவலர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆகவேதான் என் மேலாடையை கழற்றி வீசினேன்” என்றார்.
0
அவரது நியாயத்தை உணர்ந்துகொண்ட போலீசார், பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அருகில் இருந்த ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் அந்த திருநங்கை பணம் எடுக்க வைத்து அனுப்பினர்.
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அரசு அங்கீகரித்து உள்ளது. ஆனால் அது ஏட்டளவிலேயே உள்ளது. அவர்களுக்கு என தனி வரிசைகள் எங்கும் கிடையாது. ஏ.டி.எம். வரிசையிலேயே திருநங்கைகள் புறக்கணிக்கப்படுகிரார்கள் என்றால் கழிப்பறைகளை பயன்படுத்துவதில் அவர்களது நிலை மேலும் பரிதாபம்தானே.
இவர்களது நிலையை உணர்ந்து அனைத்து இடங்களிலும் திருநங்களைகுக்கு என தனி வரிசையையும், தனி கழிப்பிடங்களையும் அரசு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ஏற்கெனவே கோர்ட் உத்தரவு இருந்தும்  செயல்படுத்தாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் இனியேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
.