திருநங்கைகள் மூவர் பாடிய ‘தர்பார்’ படத்தில் சிறப்பு பாடல்….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.ப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.