ஓடும் ரெயிலில் வாலிபரைக் கொன்ற திருநங்கைகள் : அதிர்ச்சி தகவல்

த்தங்கரை

பிச்சை அளிக்காத வாலிபரை  ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி திருநங்கைகள் கொலை செய்தனர்.

விஜயவாடாவை சேர்ந்த சத்யநாராயணா என்னும் இளைஞர் அவரது நண்பர்களான காரம் வீரபாபு, கலம் சாமிதுரா, பாப்பண்ண துரா ஆகியோருடன் திருப்பூரில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.   இவர்கள் நால்வரும் திருப்பூர் செல்ல ரெயிலில் வந்துக் கொண்டிருந்தனர்.    ஜாம்ஷெட்பூரில் இருந்து ஆலப்புழா செல்லும் போகாரோ விரைவு ரெயிலில் பயணம் செய்தனர்.

நேற்று காலை ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பெட்டி ரெயில் நிலையத்தில் நின்ற அந்த ரெயில் கிளம்பிய போது சத்யநாராயணாவும் அவர் நண்பர் காரம் வீரபாபுவும் கதவருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.     வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது சில திருநங்கைகள் இருவரிடமும் பிச்சை கேட்டுள்ளனர்.    இருவரும் பிச்சை தரவில்லை.

அதனால் ஆத்திரம்டைந்த திருநங்கைகள் சத்யநாராயணாவை தலையில் அடித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

கீழே விழுந்த சத்யநாராய்ணா காயமடைந்து அங்கேயே மரணம் அடைந்தார்.    அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பரும் விழுந்து காயமடைந்தார்.   இதைக் கண்ட மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி உள்ளனர்.    திருநங்கைகள் இறங்கி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார் சத்ய நாராயணாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   வீரபாபுவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.     மேற்கொண்டு விசாரணையும்,  அந்த திருநங்கைகளை தேடுதல் வேட்டையும் நடைபெறுவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.