பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது.

வழக்கறிஞர்  படித்த பவன்குமார் காந்தி என்பவர், தனது தேர்வுத்தாள் நகல்களை அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில்  இருந்து வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து, மாநில தகவல் ஆணையம் பவன்குமார் காந்தி கோரிய விவரங்களை வழங்க அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த, தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு   நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது, அதைத்தொடர்ந்து பவன்குமார் கோரிய தகவலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கபட்ட விண்ணப்பங்களை விரைந்து முடித்து வைக்கவேண்டும் என்றும், அரசு நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகளை பொறுப்பாக்குகிறது என்றும் அதிருப்தி தெரிவிக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai high court, public administration:, Transparency is essential
-=-