சென்னை:

மிழகத்தில் பிரபலமான சென்னை லயோலா கல்லூரியில் பல திருநங்கைகள் கல்லூரி படிப்பு படித்து வரும் நிலையில், அங்கு நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் திருநங்கை ஒருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வரும் திருநங்கைகள் சமீபத்தில் அரசு மருத்துவமனையின் காவலர்களாகவும் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டனர். மேலும் காவல்துறை உள்பட பல அரசு பணிகளிலும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பொதுவாகவே ஆணாதிக்கம் மற்றும் சவால்கள் நிறைந்த இந்தச் சமூகத்தில் மூன்றாம் பாலித்தவர்களே ஏளனமாக பார்க்கும் மனநிலையே பெரும்பாலோரிடம் உள்ளது. இருந்தாலும்  ‘அவற்றையும் தாண்டி  பலர் தற்போது கல்விஅறிவு பெற்று பல பணிகளில் சேர்ந்து, தங்களது திறமைகளை வெளி உலகுக்கு நிரூபித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லயோலா கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு  படித்து வரும் திருநங்கை நலீனா பிரஷீதா என்பவர்,  அங்கு நடைபெற்ற கல்லூரி மாணவர் சங்க தேர்தல் போட்டியிட்டு  வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராகத் தேர்வாகியுள்ளார்.

தமிழக வரலாற்றிலேயே  மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு  வெற்றிபெற்ற முதல் திருநங்கை இவர்தான்.

இதுகுறித்து அவர் கூறும்போது, கடநத  2017-18 தேர்தலில் போட்டியிட பதிவு செய்திருந்தேன், ஆனால் அப்போது,  சக மாணவர்களால் கேலி செய்யப்பட்ட நிலையில் போட்டியிடவில்லை. ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் தைரியமாக போட்டியிட்டேன். ஒரு வாக்கு கிடைத்தால்கூட மகிழ்ச்சி என்று நின்றேன்.. எப்போது பசங்க தான் நின்னு ஜெய்க்கிறாங்க… நாம ஜெயிக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா பசங்க என்கிட்ட வந்து பாசமாக பேசினாங்க… கடந்த ஒரு வருஷமா இதுக்காக வேலை பாத்திருக்கோம் என்றனர்.

சரின்னு நானும் வழக்கமாகப் பெண்கள் போட்டியிட்யிடும் துணை செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டேன். பெண்கள் மட்டும் வாக்களிக்கும் பதவி இது. பதிவான சுமார் 430 வாக்குகளில் 328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்த வெற்றி மற்ற திருநங்கைகளுக்கு ஊக்கம் தரும். அவர்களும் தங்களின் கனவை நோக்கி முன்னெடுக்க நம்பிக்கை அளிக்கும்” என்றார் உற்சாகத்துடன்.

மேலும்,  பெண்கள் முன்னேற்றம் என்பது தான் எனது முதல் நோக்கம் என்று கூறிய நலீனா, கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை துறைகளில் ஆண்களுக்கு என்று தனியான அணி இருக்கிறது. பெண்களுக்கு அவ்வாறு எதுவும் இல்லை. முதல் பணியாக கல்லூரியில் பெண்களுக்கான கிரிக்கெட் டீம், ஃபுட்பால், வாலிபால் டீம் முதலியவை கொண்டு வருப்வேன். அதேபோன்று பெண்கள் பலர் இன்ரு சைபர் சார்ந்த விஷயங்களில் சிக்குகிறார்கள். அதற்கான விழிப்புணர்வையும் மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்வேன்” என்று உறுதி அளித்துள்ளார்.