போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் : 7 நாள் சம்பளம் பிடித்தம்

--

சென்னை

போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்தனர்.    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் கைவிடவில்லை.

அதன் பிறகு நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.   பேருந்துகள்  ஓட  ஆரம்பித்தன.

தற்போது போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்துள்ளது.   இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.