இன்று சுதந்திர போராட்ட தியாகிகள் தினம் :  2 நிமிட நேரம் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை

ன்று சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை முழுவதும் இரு நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளுக்கான நினைவு தினமாக ஜனவரி 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுதந்திர போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளை நினைவு கோரும் வகையில் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அவ்வகையில் இன்று காலை 11 மணி முதல் 11.02 வரை மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.   அதை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் இரு நிமிடங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

You may have missed