போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை!

சென்னை,

மிழக  போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், தமிழக அரசு, தொழிலாளர் ஆணையம் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

வரும் 24ந்தேதி முதல் மீண்டும் போராட்டம் என போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் ஆணையம் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாமே முடிவடைந்து விட்டது. ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும், புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதுகுறித்து ஏற்கனவே  பல கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மீண்டும் ஸ்டிரைக் செய்ய போவதாக அரசுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைநத்து.

தொழிலாளர் நல ஆணைய  தனி துணை கமிஷனர், யாஸ்மின் பேகம் தலைமையில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வரும் 23ந் தேதியில் இருந்து 26ந்தேதிக்குள் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.