போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை  தொடர்ந்து, அவர்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க  நீதிபதி பத்மநாபனை  சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்திருந்தது.

இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்து, வரும் 9ந்தேதி (நாளை மறுதினம்) முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நீதிபதி பத்பநாபன் தலலைமையில் நடைபெற உள்ள  இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போக்குவரத்து தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

திய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த வழக்கில்,  ஊதிய உயர்வு தொடர்பாக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டது. அதையடுத்து, முதல்கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம் நடைபெற உள்ளது.