மே4ந்தேதி முதல் போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன…?

சென்னை:
மிழகத்தில் மே 3ந்தேதியுடன் ஊரடக்கு முடிந்து, மே 4ந்தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என தெரிகிறது. இதையொட்டி,   மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மே 4 முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக போக்குவரத்துக் கழகம் அறிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும் எனவும்; மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும், அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.