சென்னை:

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கிப் போய்விட்டதாக கூறினார். சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்தனர். இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜெயலிலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் எந்த அரசு நிர்வாக பணிகளும் நடைபெறவில்லை. பின்னர் ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் நிர்வாகம் முடங்கியே இருந்தது. தொடர்ந்து தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் அரசு நிர்வாகம் செயல்படவில்லை. தற்போது அதிமுகவில் யார் முதல்வர் என்ற மல்லுக்கட்டு நடந்து வருகிறது. இதை எல்லாம் சுட்டி காட்டி அரசியல் சாசன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன் என்றார்.