தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்! கமல்

சென்னை:

ல்லதை செய்ய வேண்டும் , ஆனால் அதை சரியானவர்களுக்கு செய்ய வேண்டும், அதுதான் அரசியல் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

இன்று தமிழகம் முழுவதும் கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி அவரது நற்பணி இயக்கத்தினர் சார்பாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள  ஓட்டல் ஒன்றில், கமல் நற்பணி இயக்கம் சார்பில் மொபைல் செயலி (ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய கமல்,  முதலில் தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.

இன்று அறிமுகப்படுத்துவது செயலி அல்ல. பொது அரங்கம் என்று கூறுவதே சரியாகும் என்றார். மேலும், நல்லது செய்வதையும் பண்பறிந்து செய்ய வேண்டும். நல்லதை சரியான மக்களுக்கு செய்ய வேண்டும், அதுதான் அரசியல்.

நல்லது செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உண்மையை மட்டுமே பேசுவது என்பது எல்லோராலும் முடியாது.

அரசியல் கட்சி தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். அதன் காரணமாக  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது கனவு.

இவ்வாறு அவர் கூறினார்.