பெங்களூரு; கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படுவதாக கர்நாடகா அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் நாள்தோறும் புதியதாக 5,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கேரளாவில் இருந்து வருபவர்கள் கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2 வாரங்களில் கேரளாவில் இருந்து வந்தவர்கள் கொரோனா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.