பெங்களூருவில் கெஜ்ரிவாலுக்கு சிகிச்சை

பெங்களூரு:

டில்லி கவர்னர் அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். 9 நாட்கள் நடந்த இந்த போராட்டம் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் காரணமாக கெஜ்ரிவாலின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளது.

இதற்கு சிகிச்சை பெற கெஜ்ரிவால் இன்று பெங்களூரு வந்தார். சில நாட்களுக்கு கெஜ்ரிவால் இங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூச்சுத்திணறலால் அவ்வப்போது அவதிப்பட்டு வரும் கெஜ்ரிவால் பெங்களூரு தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது