தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. கிழக்கு டெல்லியை மையமாக கொண்டு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள தருணத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியில் வெளியில் ஓடி வந்தனர். பலர் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பீதியடைந்தனர்.

நிலநடுக்கம் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டன. ரிக்டரில் 4.1 அலகுகளாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.