Random image

டில்லியில் இன்று மீண்டும் லேசான நிலநடுக்கம்

டில்லி:

லைநகர் டில்லியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்தனர்.

டில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி இருந்தது. இன்று காலை சரியாக 6.28 மணிக்கு  நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஆனால், சேத விவரம் ஏதும் இல்லை.

முன்னதாக நேற்று மாலை தலைநகர் டில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்ச உணர்வு ஏற்படுத்தி உள்ளது.

You may have missed