மோடியின் பதவியேற்பு ட்ரென்டை பின்னுக்கு தள்ளிய #PrayforNesamani ஹாஷ்டேக்…!

#Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் நேற்று முதல் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

மே 27-ம் தேதி Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனப் பதிவிட்திருந்தனர் .

துபாயில் இருக்கும் விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்” என கமெண்ட் பண்ணி இருந்தார்

அதற்கு மற்றொருவர் “அவர் எப்படியிருக்கிறார்?” என கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்காகப் பிராத்திப்போம் என்று ஃபேஸ்புக் பக்கத்தின் கருத்துப் பக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்.

விளையாட்டாகப் போட்ட கமென்ட் இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. என விக்னேஷ் பிரபாகர் தனது முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதை காமெடியாக ஒரு சிலர் பார்த்தாலும் , இன்றைக்கு மோடியின் பதவியேற்பை இந்த ட்ரெண்ட் மூலம் பின்னுக்கு தள்ளி இருக்கு . இதுவும் ஒரு வகை அரசியல் தான் போலும்னு ஒரு சிலர் நினைக்க தவறவில்லை.

கார்ட்டூன் கேலரி