குளிர் நாட்டிலிருந்து பாலைவனத்திற்கு..! – இது டிரென்ட் பெளல்ட்டின் கவலை

துபாய்: நியூசிலாந்து போன்ற குளிர் நாட்டிலிருந்து வரும் எனக்கு, அமீரகப் பாலைவனத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் போட்டிக்கு தயாராவது சவாலானது என்றுள்ளார் அந்நாட்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பெளல்ட்.

இந்த சீசனில் மும்பை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் டிரென்ட் பெளல்ட்.

“நியூசிலாந்தில் தற்போது குளிர்காலம் நிலவி வருவதால், 7 முதல் 8 டிகிரி வெப்பநிலையே உள்ளது. ஆனால், அமீரகத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது. எனவே, இந்த வெப்பத்தை சமாளித்து நாம் பயிற்சியில் ஈடுபட்டு, போட்டிக்கு தயாராக வேண்டும்.

இங்குள்ள சூழல் அவ்வப்போது மாறக்கூடியது. நாம் எதிர்பார்க்கும் இடத்தில் பந்தை ‘பிட்ச்’ செய்து பழகிவிட்டால், எதிரணிக்கு நெருக்கடியை உண்டாக்கலாம்” என்றுள்ளார் பெளல்ட்.