கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள சண்டிகர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்…

சண்டிகர்:

லக நாடுகளை திணறடித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சண்டிகர் ண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா உள்பட 210க்கும் மேற்பட் உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  கொரோனா பாதிப்புகளின் இறப்புவிகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய  ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர் பாளர், அண்மையில் முடிவடைந்த மல்டி சென்டர் சோதனையில், கடுமையாக பாதிக்கப்பட்ட ஐ.சி.யூ நோயாளிகளின் இறப்பைக் எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கிறது என்பதைக் கண்டறிந்ததாக தெரவித்துள்ளார்.

ஆய்வுக்கு முந்தைய கட்டத்தில், கொரோனா  பாதிக்கப்பட்ட 4   நோயாளிகளில் எம்டபிள்யூ தடுப்பூசியின் பாதுகாப்பை ஆய்வு செய்ததாகவும்,மேலும் குறுகியகால பாதகமான விளைவுகள் எதுவும் காணப் படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனை முடிவடைந்த பின்னரே நீண்டகால பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் பயன்பாட்டின் தாக்கம் அறியப்படும் என்றும்  கூறியுள்ளார்.