கடனை திருப்பி தராத இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற பயங்கரம்..

 

போபால் :

த்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விஜய் சகாரியாவுக்கு 32 வயது ஆகிறது. இந்த இளைஞர் அதே பகுதியில் வட்டிக்கு கடன் கொடுக்கும் ராதேஷியாம் லோதா என்பவரிடம் ஊரடங்கின் போது 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

அந்த கடனை விஜய் திருப்பி செலுத்தவில்லை விஜய், இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயிடம் கொடுத்த கடனை கேட்டு சண்டை போட்டுள்ளார், லோதா. தனது பண்ணையில் வேலை செய்து கடனை கழிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

வாங்கிய கடனுக்காக, லோதா பண்ணையில் பணி புரிய விஜய் மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த லோதா மண் எண்ணையை எடுத்து வந்து விஜய் உடம்பில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடம்பு முழுவதும் பற்றி எரிந்த நிலையில் அலறி துடித்த விஜய், குணாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தார்.

சாகும் தறுவாயில் விஜய் அளித்த வாக்குமூலத்தை அவரது உறவினர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

“கடனை திருப்பி தராததால், தன் மீது மண் எண்ணையை ஊற்றி லோதா எரித்தார்” என விஜய் அளித்த வாக்குமூலத்தின் வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பழங்குடியின இளைஞரை உயிரோடு எரித்துக்கொன்ற லோதாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

– பா. பாரதி