வாஷிங்டன்,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியுள்ள இந்திய வம்சாவழியினர் அவரது உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது இறுதி சடங்கில் பல்வேறு பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர்  நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவரது மறைவுக்கு  அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகி உள்ள இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினார்கள்.

வாஷிங்டனில்  உள்ள கேபிடல் ஹில் பகுதியில் நடந்த இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி  சிகாகோவை மையமாக கொண்டு இயங்கும் தமிழ் இளைஞர்கள் உலக கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.