படேலுக்கு அளித்த மரியாதை தாமதமானது : படேல் குடும்பத்தினர்

சாது பெட் தீவு, குஜராத்

ர்தார் படேலுக்கு இவ்வளவு பெரிய சிலை அமைத்து மரியாதை செய்தது மிகவும் தாமதமான செயல் என அவருடைய சகோதரரின் பேரன் தெரிவித்துள்ளார்.

நேற்று குஜராத் மாநிலம் சாது பெட் தீவில் சர்தார் வல்லப்பாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான சிலையான இந்த சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த விழாவுக்கு படேலின் குடும்பத்தினர் 36 பேர் கலந்துக் கொண்டனர். அவர்களின் படேலின் சகோதரரின் பேரனான திருபாய் படேல் என்னும் 91 வயது முதியவரும் ஒருவர் ஆவார்.

செய்தியாளர்களிடம் திருபாய் படேல், “சர்தார் படேலுக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் இப்போதாவது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் தனது சிறுவயதில் கரம்சாத் கிராமத்தில் இருந்து நதியாத் வரை நடந்து சென்று பள்ளிக்கல்வியை பயின்றார். அவர் உயிருடன் இருந்தால் இத்தகைய சிலை திறப்பதைவிரும்ப மாட்டார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டம் நடத்தி இருந்தால் மேலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பார்.” என தெரிவித்துள்ளார்.

திருபாய் படேலின் மகளான 61 வயது மூதாட்டி மாலினி படேல், “சர்தார் படேல் இந்த நாட்டுக்கு ஆற்றிய பணியுடன் ஒப்பிடுகையில் இந்த சிலை அமைப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை. அவரே எனது ஆதர்ச நாயகன். அவர்தான் உண்மையில் இந்த தேசப்பிதா. நான் அவரை சந்தித்தது இல்லை. ஆனால் அவருடைய மகள் அவரைக் குறித்து சொல்வதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.