திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!

திருச்சி:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அதையொட்டி சிறப்பு மிக்க உச்சி பிள்ளையார் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

1trichy

திருச்சியில் உள்ள  உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை நிவேதனமாக படைக்கப்பட்டது. பிள்ளையாருக்கு படைப்பதற்காக மெகா கொழுக்கட்டையை தூளிகட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மலைக்கோயிலுக்கு சுமந்து சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பூஜையை கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் மலைக்கோட்டை கோவிலில் குவிந்தனர்.

கார்ட்டூன் கேலரி