திருச்சி மற்றும் சென்னை புறநகர் ரயில் நேரங்களில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:

வைகுண்ட ஏகாதசி மற்றும் பராமரிப்பு பணி காரணமாக  திருச்சி மற்றும் சென்னை புறநகர் ரயில் நேரங்களில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சில ரயில் நேரங்களில் மாற்றம் செய்தும், சில ரயில்களை ரத்து செய்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வைகுண்ட ஏகாதசி சிறப்பு – திருச்சி

வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வரும் 18ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையொட்டி வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில்  மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் காலை 9:26க்கு வந்து 9:27க்கு புறப்படும். அதே போன்று மாலை 6:03க்கு வந்து 6:04க்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ்கண்ட ரயிலில் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று இரவு ரத்து  செய்யப்படும் ரயில்கள்: 

வண்டி எண்: 40158 தாம்பரத்திலிருந்து இரவு 11:30க்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி ரத்தாகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:05க்கு கிளம்பும் தாம்பரம் வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40155 சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:30க்கு கிளம்பும்  தாம்பரம் வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40157 சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:59க்கு கிளம்பும் தாம்பரம் வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40572 செங்கல்பட்டிலிருந்து இரவு 10 :15 க்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்தாகிறது.

வண்டி எண்: 40574 செங்கல்பட்டிலிருந்து இரவு 11 :10 க்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்தாகிறது.

நாளை (16ம் தேதி) ரத்து செய்யப்படும் ரயில்கள்: 

வண்டி எண்: 40301 சென்னை கடற்கரையிலிருந்து காலை 4:15க்கு கிளம்பும் தாம்பரம்  வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40302 தாம்பரத்திலிருந்து காலை 4 மணிக்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40304 தாம்பரத்திலிருந்து காலை 4:20 மணிக்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40306 தாம்பரத்திலிருந்து காலை 4:40 மணிக்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40308 தாம்பரத்திலிருந்து காலை 5:15 மணிக்கு கிளம்பும் சென்னை கடற்கரை வண்டி ரத்தாகிறது.

வண்டி எண்: 40601 சென்னை கடற்கரையிலிருந்து காலை 3:55 க்கு கிளம்பும் செங்கல்பட்டு வண்டி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்தாகிறது.

வண்டி எண்: 40603 சென்னை கடற்கரையிலிருந்து காலை 4:40க்கு கிளம்பும் செங்கல்பட்டு வண்டி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்தாகிறது.

வண்டி எண்: 40605 சென்னை கடற்கரையிலிருந்து காலை 5 மணிக்கு கிளம்பும் செங்கல்பட்டு வண்டி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்தாகிறது.