தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திருச்சி பெல் தொழிலாளர்கள் போராட்டம்


திருச்சி:

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி கனரக தொழில் நிறுகூனமான பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தினைக் கண்டித்து பெல் ஆலை முன்புஎ போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

பெல் அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் மெயின்கேட் முன்பு இந்த கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியூ, பி.எம்.எஸ்., உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்தினைக் கண்டித்து பேசினர்.

அப்போது, அங்கு வந்த அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்,  மாஞ்சோலை துப்பாக்கிசூடு,  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து ஏடாகூடாமாக பேசினார். இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் அதிமுகவினரை அங்கிருந்து அகற்றினர்.